உலகம்
மோசடியில் ஈடுபட்டு இந்திய நிறுவனங்களுக்கு பணம் அனுப்பிய பிரேசில் ஆளுநர் - 64 வங்கி கணக்குகள் முடக்கம்!
அமலாக்கத்துறை கிட்டத்தட்ட 64 இந்திய தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்கை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பிரேசில் அரசின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்துள்ளது.
பிரேசிலில் அங்குள்ள ஆளுநர் ஒருவர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு மோசடி செய்த பணத்தை அனுப்பியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு நடந்துள்ள பணமோசடி தொடர்பாக விசாரணை நடந்துவருவதைத் தொடர்ந்து சில இந்திய வங்கிக் கணக்குகளை முடக்கும் வேண்டுகோளை பிரேசில் அரசாங்கம் வைத்துள்ளது.
ஹேமில்டன் ஹவுஸ்வேர்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த பதிலை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிறுவனங்களில் ஹேமில்டன் ஹவுஸ்வேர்ஸும் ஒன்று.
ஹேமில்டன் ஹவுஸ்வேர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் பிளாஸ்டிக், தெர்மோ ஸ்டீல், பீங்கான் சாமான்கள் மற்றும் கண்ணாடி சாமான்களை ‘மில்டன்’ என்ற பெயரில் தயாரித்து விற்கிறது. இந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கு கடந்த ஜுலை 13-ம் தேதி அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் பிரேசில் மற்றும் இந்தியா இடையேயான உள்ள சட்டரீதியான ஒப்பந்தத்தின் ரீதியிலேயே நடவடிக்கையை எடுதுள்ளதாகவும், இந்த பிரச்சினையில் எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிரேசிலில் பணமோசடியில் ஈடுபட்டதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் அந்த ஆளுநரின் பெயரை அமலாக்கத்துறையினர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்