உலகம்

“உலக அளவில் 2ம் இடம் - பலி எண்ணிக்கையில் 80 ஆயிரத்தை தாண்டியது”: அலட்சியம் காட்டும் பிரேசில் அதிபர் !

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 14,852,700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 613,213 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,961,429பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 143,834 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது.

அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,154,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 28,099 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 20,157 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 21 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 763 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை 80,251 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 32 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே தொற்றுக் குறித்து எந்த வித கவலையும் இல்லாமால் இருந்ததாக பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ இருந்ததாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “1.48 கோடி பேர் பாதிப்பு - 6.13 லட்சம் பேர் பலி” : உலக நாடுகளைச் சிதைக்கு கொரோனா தொற்று!