உலகம்
நிறவெறிக்கு ஆதரவாக ட்வீட் போட்ட நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட Reebok நிறுவனம்: குவியும் ஆதரவு
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கழுத்துப் பகுதியில் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி முட்டியால் அழுத்தியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படுகொலைக்கு நீதி கோரியும், கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்தும், மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டத்திற்கும் கருப்பின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காகவும் #BlackLivesMatter என்ற போராட்டம் அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது. இந்த சூழலில் கூகிள், ட்விட்டர், நெட்ஃபிக்ஸ், நைக்கி மற்றும் ரீபொக் போன்ற சிறந்த பிராண்டுகள், பிளாக் லைவ்ஸ் மேட்டர் மனித உரிமை பிரச்சாரத்தை ஆதரிக்கும் தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இந்த பிராண்டுகளின் இந்த நிலைப்பாட்டிற்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் ரீபொக் (Reebok) என்ற விளையாடுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை விற்கும் நிறுவனமும் கிராஸ் ஃபிட் (CrossFit) என்ற உடற்பயிச்சி மைய நிறுவனமும் பல ஆண்டுகளாக வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன.
இந்நிலையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட விவாகரத்தில் கிராஸ் ஃபிட் நிறுவனம் அமைதி காத்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சை ஏற்படித்தியது. அதுமட்டுமின்றி கொரோனா பேரிடர் நேரத்தில் நடைபெறும் எழுச்சிகரமான போராட்டத்தை அதன் நிர்வாக இயக்குனர் தவறாக சித்தரித்து சமூக வலைதளில் பகிர்ந்துள்ளார்.
அதனால் முன்னணி விளையாட்டு வீரர்கள் பலர் கிராஸ் ஃபிட் நிறுவனத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிராஸ் ஃபிட் நிறுவனத்தைக் கண்டிக்கும் விதமாக ரீபொக் நிறுவனம் தனது கிராஸ் ஃபிட் நிறுவனத்துடன் தங்கள் தொடர்பை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரீபொக் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “கிராஸ்ஃபிட் தலைமையகத்துடனான எங்கள் கூட்டு இந்த ஆண்டில் முடிவுக்கு வருகிறது. சமீபத்தில், ஒரு புதிய ஒப்பந்தம் தொடர்பான விவாதங்களில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகளினால், கிராஸ்ஃபிட் தலைமையகத்துடனான எங்கள் உறவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம்.
2020 ம் ஆண்டில் எங்களது மீதமுள்ள ஒப்பந்தக் கடமைகளை நாங்கள் நிறைவேற்றுவோம். கிராஸ்ஃபிட் விளையாட்டுப் போட்டியாளர்கள், ரசிகர்கள் மற்றும் சமூகத்திற்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம்” எனத்தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கிராஸ்ஃபிட் நிர்வாக இயக்குனர் தனது கருத்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அமெரிக்காவில் கொடிக்கட்டி பறந்த கிராஸ்ஃபிட் இனி இல்லாமல் போகும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரீபொக்கின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!