உலகம்

“6.5 லட்சம் இந்தியர்களின் வேலைப் பறிபோகும் அபாயம்” : ஓமன் அரசின் அறிவிப்பால் கதி கலங்கும் இந்திய மக்கள்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உலக முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்துள்ளது.

அந்தவகையில், கொரோனா பாதிப்பு மற்றும் வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் வீழ்ச்சி என பல பாதிப்புகளை ஓமன் நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு அரசாங்கம் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக சில அதிரடி முடிவை எடுத்துள்ளது. அந்த அதிரடி முடிவால் ஓமனில் வாழும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஓமன் அரசின் அறிவிப்பை செய்தியாக வெளியிட்டுள்ள கல்ஃப் நீயூஸ் கூறுகையில், ஓமன் நாட்டில் குடியேறி அரசு பணிகளில் வேலை செய்துவரும் வெளிநாட்டினரை பணியில் இருந்து நீக்க உத்தவிட்டுள்ளதாகவும், அந்த இடத்திற்கு உள்நாட்டு மக்களை பணியமர்த்தக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்கு குடியுரிமைப் பெற்று பணியாற்றும் 6.5 லட்ச இந்தியர்களுக்கு வேலை இல்லாமல் போகும் என கூறியுள்ளனர். அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் அதனை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு வேலை பரிபோகும் எனக் கூறப்படுகிறது. ஓமன் மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

Also Read: “பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்” : வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த வட கொரிய ஊடகம்!