உலகம்
“பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்” : வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த வட கொரிய ஊடகம்!
வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட விளைவால் இந்த மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவியது.
குறிப்பாக, கிம் ஜாங் உன்-னின் உடல்நிலை மோசமாகவிட்டதாக அமெரிக்கா ஊடங்கள் செய்தியை வெளியிட அது தீயாய் உலக நாடுகளுக்குப் பரவியது. பின்னர் ஒருகட்டத்தில் அவர் இறந்தேப் போய்விட்டதாகவும் இறந்த செய்தியை அந்நாட்டு அரசு மறைத்துவிட்டதாக பல்வேறு கட்டுக் கதைகளை சில குறிப்பிட்ட ஊடங்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தது.
இதனிடையே கிம் ஜாங் உன்னுக்கு எதுவும் ஆகவில்லை என அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தென் கொரியா உயர் அதிகாரிகள் அந்த வந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தனர். இந்நிலையில், கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் கிம் ஜாங் உன் தோன்றியதாக வட கொரியா அரசு ஊடகமே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்ட தகவலின் படி, து நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றிய கிம் ஜாங் உன் உட தொழிற்சாலை ஒன்றினை தொடங்கிவைத்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கிம் ஜாங் உன் ஒரு தொழிற்சாலையினை தொடங்கி வைக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. வட கொரியா மூத்த அதிகாரிகள் மற்றும் அவர் தங்கையான கிம் யோ ஜாங் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கிம் கலந்து கொண்டார். இந்த செய்தி கிம் ஜாங் பற்றிய வதந்திக்கு பதிலடி எனக் கூறப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!