உலகம்
ரஷ்ய நாட்டின் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - தீவிர பரிசோதனையில் மிகைல் மிஷிஸ்தின்: அதிர்ச்சி தகவல்!
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 210 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 234,123 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 3,308,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,042,991 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்த் பிரதமரைத் தொடர்ந்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷிஸ்தினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளவேலையில், இதுவரை 106,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று ஒரேநாளில் ரஷ்யாவில், 7,099 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பலியோனோர்களின் எண்ணிக்கையும் 1,073 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியதை அடுத்து மே11-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் முக்கிய நிர்வாகிகள் மூலம் அந்நாட்டு பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் கொரோனா தொற்று ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா அறிகுறிகள் இல்லாத நிலையில் தாமாகவே கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். இந்நிலையில் வெளியான பரிசோதனையில் மிகைல் மிஷிஸ்தினுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிபர் விளாடிமிர் புடின் வீடியோ கான்பிரன்சிங்கில் அவர் பங்கேற்க முடியவில்லை. அதனால் தன்னுடைய பணியில் இருந்து தற்காலிமாக ஒதுங்கி இருக்க போவதாக பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ரஷ்யாவின் துணை பிரதமர் ஆன்ட்டரி போலோஸ்வே தற்காலிக பிரதமராக பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பாதித்து குணமடைந்த நிலையில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளுடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!