உலகம்
“ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தால் மரணம் அதிகரிக்கிறதா?” : ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் வல்லரசு அமெரிக்காவிடம் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும், மருந்துகள் இல்லாமலும் அந்நாட்டு மருத்துவத்துறை மிகுந்த சிரமங்களை சந்தித்தது. இதனையடுத்து சீனா, இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு மருத்துவ உதவிகளை வழங்கி வந்தன.
இந்தியாவில் இருந்து பெருமளவு மருந்துகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரையை உலக நாடுகளுக்கு பரிந்துரை செய்ததே அமெரிக்காதான்.
சுமார் 30 மில்லியன் டோஸ்கள் ஹைட்ராக்ஸி க்ளோரோகுயினை இருப்பு வைத்துள்ளது அமெரிக்கா. அப்படி இருக்கையில், அமெரிக்காவில் உயிர் பலி அதிகரிப்பதை உணர்ந்து ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தால் எந்தப் பயனும் இல்லையென்றும் அதனைப் பயன்படுத்தியதால் மரணம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய சொந்த நலன்களுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரை செய்ததாக அமெரிக்க மருத்துவ வல்லுநர்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அந்த மருந்தினால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் எந்தப் பயனும் உண்டாகவில்லை என்றும் நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் எம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் என்னும் அமைப்பால், நிதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மூலம்தான் மரண விகிதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, என்.ஐ.எச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா சிகிச்சைக்கான மாதிரிகள் தற்போது ஆய்வுகளில் உள்ளன. ஹைட்ராக்சிக்ளோரோகுயினை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது பற்றி மருத்துவ புள்ளி விவரங்கள் இல்லை. மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
மேலும், குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்சிக்ளோரோகுயின் அளிக்கப்படும் நோயாளிகளை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான விளைவுகள் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதால் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம் என என்.ஐ.எச் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தியால் உலக நாடுகள் கதிகலங்கி இருக்கும் நேரத்தில், அமெரிக்கா இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழக ஆணையர் ஸ்டீபன் எம்.ஹான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது பற்றி எனக்கும் ஒன்றும் தெரியவில்லை. மருந்து தொடர்பாக சில சில நல்ல ரிப்போர்ட்களும் உள்ளன; ஆனால் இது நல்ல ரிப்போர்ட் அல்ல. இது தொடர்பாக நாம் ஒருகட்டத்தில் முடிவெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு அந்நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!