உலகம்

“1,000 பேர் கூடி இறுதிச் சடங்கு; இந்துத்வா அமைப்பினருக்கு கொரோனா” : வெறுப்பை விதைக்காத பிரிட்டன் மக்கள்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 12,85,342 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பிரிட்டனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்தபோதே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததே இந்தப் பெரும் பாதிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அந்நாட்டின் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன், சுகாதாரத் துறை அமைச்சர் எனப் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிரிட்டன் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த 1,000 பேர் கலந்துகொண்ட இறுதிச் சடங்கில் பங்கேற்ற பலருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கம் எனப்படும் இஸ்கான் என்ற இந்து மத அமைப்பு வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பில் பல வெளிநாட்டினரும் உள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் மிகப்பெரிய நகரங்களில் தங்களின் கிளைகளை நிறுவி இந்து சமய கூட்டங்கள் மாநாடு என இஸ்கான் அமைப்பு நடத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகி பிரிட்டணியில் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு மார்ச் 12ம் தேதி நடைபெற்றுள்ளது. சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.இதில் அந்த நிகழ்வில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.

அந்த நேரத்தில் அரசு ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்காததன் விளைவே அங்கு அதிகமானோர் கூடியிருந்துள்ளனர். இதனையடுத்து அடுத்த ஒருவார கால இடைவெளியில், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த 5 பேரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த பிரபல சாமியார் ராமேஷ்வர தாஸ் என்பதும் அவருக்கும் வயது 70 எனவும் தெரியவந்துள்ளது. மேலும் 30 வயதுக்குட்பட்ட 3 பேரும் இறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்வில் பங்கேற்ற 900 பேரை அரசு கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளது.

அவர்களின் வீடுகளில் உள்ளவர்களையும் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இறுதிச் சடங்கில் பங்கேற்ற பலரும் பிரிட்டனில் பல பகுதிக்குச் சென்றுவந்துள்ளனர். சிலர் அரசு அதிகாரிகள் என்பதால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தவேளையில் அந்நாட்டு மக்கள் இஸ்கான் இயக்கத்தைச் சார்ந்த யார் மீதும் வெறுப்புக்காட்டவில்லை என்று செய்தியும் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் இஸ்லாமியர்கள் கூடியபோது அங்கிருந்த ஒருவருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் இன்று பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Also Read: “கொரோனா மதச்சார்பற்றது; அது சமத்துவத்தை நம்புகிறது”: வெறுப்பு பிரச்சாரத்திற்கு ராஷி கண்ணா கொடுத்த பதிலடி!

அதை ஒரு விபத்தாக பார்க்காமல் திட்டமிட்டு மத வெறுப்பு பிரச்சாரத்தை இந்தியாவில் செய்துவருகின்றனர். கொரோனா சாதி, மத அந்தஸ்து பாக்காமல் எல்லோரை சமமாகக் கொல்கிறது என வெறுப்பு பிரச்சாரம் செய்யும் இந்துத்வா கும்பல் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Also Read: “மாஸ்க் அணிய மறுத்த பழமைவாத நகரம்” : 40% மக்களுக்கு கொரோனா பாதிப்பு? - அதிர்ச்சித் தகவல்! #Covid19