உலகம்
“நியூயார்க்கில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் சாவு - ஒரேநாளில் 1,480 பேர் பலி” : மோசமான நிலையில் அமெரிக்கா!
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 64,675 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 1,201,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 10,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 1,480 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 32,000 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,11,357 -ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 1,14,775-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,565 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க்கில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!