உலகம்

“அரச குடும்பத்தில் முதல் பலி” : கொரோனா பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30,934 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,63,875 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 73,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,982 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்படு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக எடுத்துவருகிறது.

இதற்கிடையே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். 86 வயதான ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ள செய்தியை அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த முதல் அரச குடும்ப இளவரசி மரியா தெரசா என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசி மரியா தெரசாவின் மறைவு அரச குடும்பத்து உறுப்பினர்களையும் நாட்டுமக்களையும் அதிர்ச்சியடை செய்துள்ளது.

Also Read: “கொரோனா பாதித்தவர்களோடு கைகுலுக்கியதால் நானும் பாதிக்கப்பட்டேன்” : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்!