உலகம்
“ஒரே நாளில் 18,000 பேர் பாதிப்பு; திணறும் வல்லரசு அதிபர்" : உதவிக்கு வந்த ஜின்பிங் - அமெரிக்கா நிலை என்ன?
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
உலகளவில் நேற்று 24 ,341 பேர் உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,352 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 10,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 268 பேர் இறந்துள்ளனர். 18,000 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவரை மொத்தமாக 1,304 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85,991-ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 39,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து நியூயார்க்கைச் சேர்ந்த 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
புல்லட் ரயில்களை விட கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு தெரிவித்தார். 30,000 சுவாச கருவிகள் (வென்ட்டிலேட்டர்) தேவைப்படும் இடத்தில் வெறும் 7000 சுவாசக் கருவிகள் மட்டுமே உள்ளன என்றும் அவர் வேதனையும் தெரிவித்தார். அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உலகையே தன் அதிகாரத்திற்கு கொண்டுவர துடிக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் பல மாகணங்கள் மூடப்பட்டு விமானம், ரயில் சேவை, கார் உற்பத்தி, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளன.
கடந்த ஒருவாரத்தில் மட்டுமே அமெரிக்காவில் 40 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இந்த வேலையின்மையை சமாளிக்க திட்டம் எதுவும் கொண்டுவரப்படாததன் விளைவாக, 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையின்மை சலுகையை பெற அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார மந்தநிலைக்கு பிறகு அமெரிக்காவில் தற்போது வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகம் என்று அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்-கிடம் தொலைப்பேசி மூலம் டிரம்ப் தொடர்புக் கொண்டுபேசியுள்ளார். அப்போது, “கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றுபட்டு போரிடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து ஜின்பிங் “கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களையும், அனுபவங்களையும் அமெரிக்காவுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள சீனா விருப்பம் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா வைரஸ் அமெரிக்காவை பெரிய அளவில் பாதிப்படைய செய்யாத போது டிரம்ப், ‘சீன வைரஸ்’ என கொரோனாவுக்கு முத்திரைக் குத்தி சீனா மீது வெறுப்புணர்வை விதைத்து வந்தார். ஆனால் இந்த உரையாடலுக்கு பிறகு இப்போது ‘கொரோனா வைரஸ்’ என்று அழைக்கத் தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் சீன எந்தவித பகைமையும் இல்லாமல், சீனாவில் உள்ள சில மாகாணங்கள், நகரங்கள், கம்பெனிகள் அமெரிக்காவுக்கு மருந்துகளை வினியோகிப்பதுடன், தங்கள் ஆதரவை அளித்து வருவதாகவும் டிரம்பிடம் சீன அதிபர் ஜின்பிங் கூறியதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பை சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் அழைத்து பேசியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் உள்ள மோதல் போக்கு முடிவுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளையில், இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபரிடம் தொடர்புக்கொண்டு இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!