உலகம்
ஒட்டுமொத்த இத்தாலியும் கதறிய நேரத்தில் கொரோனா வைரஸை தோற்கடித்த ஒரே நகரம்! #CoronaAlert
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் இத்தாலி மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 6,077 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 63,927 பேர் பாதிக்கப்பட்டுளனர். இத்தாலி மருத்துவர்கள் இரவு பகலாக COVID-19 எனும் கொரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொரோனாவால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ள இத்தாலிக்கு உதவும் வகையில் மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் கியூபா, அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, இத்தாலி நாட்டின் வோ நகரம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தோற்கடித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்த இத்தாலியும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் அங்குள்ள வோ நகரம் மற்ற நகரங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி இத்தாலியின் வோ நகரம், இத்தாலி சுகாதாரத் துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வோ நகருக்குள் யாரும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதி மறுக்கப்பட்டனர். மேலும் நகரில் உள்ள அனைவரும் சோதனை செய்யப்பட்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களுக்குக் கூட சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் 14 நாட்களுக்குப் பின்னர் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படாத சாதனையை வோ நகரம் புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் வோ நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனாவால் அச்சுறுத்தலைச் சந்தித்து வரும் அனைத்து நாடுகளுக்கும் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!