உலகம்
ஹன்டா வைரஸ்: கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் சீனாவில் புதிய வைரஸ் - ஒருவர் பலி!
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் தற்போது உலகின் 160க்கும் மேலான நாட்டில் உள்ள மக்களை அசாத்தியமாக புரட்டி போட்டு வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலால், இதுவரையில் சீனாவில் மட்டுமே 80 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு 3,000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பாதிப்பில் சீனாவை விட பின்தங்கியுள்ள இத்தாலி கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் முதல் நாடாக உள்ளது.
கோவிட்19 என பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் வயது வித்தியாசம் பாராமல் சகட்டுமேனியாக அனைவரையும் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. நோய் தாக்காமல் இருக்க தடுப்பூசியோ, தொற்று ஏற்பட்டால் மருத்துவம் பார்ப்பதற்கு மருந்து என இதுவரை இந்த கொரோனாவுக்கு எந்த மருந்துகளும் கண்டுபிக்கப்படவில்லை.
ஆனால், அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க, ஜெர்மனி என பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு சீனாவில் நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது. அண்மை காலங்களாக வூஹானில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்துள்ள போது, புதிதாக ஹன்டா வைரஸ் (HantaVirus) எனும் நோய் ஒன்று உருவாகியுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் எனும் பகுதிக்கு பேருந்தில் பயணித்த ஒருவர் திடீரென மரணித்திருக்கிறார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த நபர் ஹன்டா வைரஸூக்கு ஆளாகியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹன்டா வைரஸானது, எலிகளின் கழிவுகள் மூலம் உருவாகக் கூடியது. உபயோகத்தில் இல்லாத வீட்டில் அல்லது அறைகளில் உள்ள பொருட்களில் எலிகள் எச்சம் வைப்பதும், மலம் கழிப்பதும் வழக்கமாக இருக்கும். வெகுநாட்களாக அந்த கழிவுகள் அகற்றப்படாமலோ கண்டறியப்படாமல் இருந்தால் நாளடைவில் அவைகள் தூசாக மாறும்.
அந்த தூசித் துளிகளை சுவாசிக்கும் போது இந்த ஹன்டா வைரஸ் நோய் உண்டாகும். இந்த வகையான வைரஸ் கொரோனாவை போன்று ஒருத்தரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. ஆனால், இந்த ஹன்டா வைரஸுக்கு உடனடி சிகிச்சையே தீர்வு. இல்லையே மரணத்தையே உண்டாக்கும்.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஆகியவை முதலில் இந்த ஹன்டா வைரஸால் ஏற்படும். தீவிரமடைந்த பிறகு வறட்டு இருமல், மூச்சுத் திணறல், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி உயிரிழக்க நேரிடும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!