உலகம்
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா : அரசின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் பரவி இருக்குமோ என அச்சம்!
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.,யுமான நடீன் டோரீஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நடீன் டோரீஸ் மருத்துவ சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், சமீபத்தில் அவரைச் சந்தித்த நபர்களை வரவழைத்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்குமாறு பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் 6 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தச் சூழலில், 62 வயதான நடீன் டோரீஸ் பிரிட்டன் நாடாளுமன்ற விவாதம் மற்றும் மகளிர் தின நிகழ்ச்சிஆகியவற்றில் கலந்துக்கொண்டதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?