உலகம்
கொரோனா நோயாளிகள் கண்காணிப்பு மையம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி... சீனாவில் தொடரும் சோகம்!
சீனாவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ள நபர்களை கண்காணிக்கும் முகாம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம் நாட்டை தற்காத்துக்கொள்ள அந்தந்த நாட்டின் அரசுகள் கண்காணிப்பையும், பரிசோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளன.
சீனாவில் மட்டுமே மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கொரோனா அறிகுறி கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
சீனாவின் பீஜிங் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடி ஹோட்டல் ஒன்று, கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டது. இந்த முகாமில் கொரோனா அறிகுறியுடன் இருக்கும் நபர்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மார்ச் 7ம் தேதி அந்த ஹோட்டல் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், முகாமில் தங்கியிருந்த 71 பேர் இடிபாடுகளில் சிக்கினர். பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர் 38 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மேலும், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நேற்று இடிபாடுகளில் சிக்கி பலியான 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சியவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே, சீனாவில் மக்கள் கொரோனா தாக்குதல் காரணமாக கொத்துக்கொத்தாகப் பலியாகிவரும் நிலையில், கண்காணிப்பு முகாம் கட்டிடம் இடிந்து விழுந்து நோயாளிகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !