உலகம்
காலநிலை மாற்றத்தால் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலக அளவில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
2018ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழையால் அதிகப்படியாக இழப்புகளை இந்தியா சந்தித்தது. இந்த நிலையில் காலநிலை மாற்றங்கள், அதன் பாதிப்புகள் குறித்த ஆய்வு முடிவுகளை ஜெர்மன்வாட்ச் நிறுவனம் புதன்கிழமை அன்று வெளியிட்டது.
உலகம் முழுவதுமுள்ள 181 நாடுகளில் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், காலநிலை மாற்றங்களால் ஏற்பட்ட பொருளாதார, ஜிடிபி இழப்புகள், மக்களின் இறப்பு உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.
அதேபோல சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், அதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.
காலநிலை மாற்றமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் பருவநிலை மாற்றங்களால் அதிக உயிரிழப்பு இந்தியாவில் நடந்திருப்பதாகவும், அதேபோல பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி புள்ளிவிவரமும் இதில் வெளியாகியுள்ளது.
உலக அளவில் காலநிலை மாற்றங்களால் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், 1999ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 17வது இடம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!