உலகம்
36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை...!
இலங்கையில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஜாப்னா எனப்படும் யாழ்ப்பாணம். அங்குள்ள பலாலி விமானநிலையத்திற்கு ஏற்கனவே சென்னையிலிருந்து விமானசேவையை ஏா் இந்தியா விமான நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தது.
இலங்கையில் உள்நாட்டு போா் தீவிரம் அடைந்ததால் 1983ம் ஆண்டிலிருந்து சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை நிறுத்தப்பட்டது.
அங்கு போா் ஓய்ந்து அமைதி திரும்பியதும், யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமானசேவையை தொடங்க வேண்டும் என்று தொடா்ந்து பொதுமக்கள் வலியுறுத்தினா். ஆனால் உள்நாட்டு போரில் பலாலி விமானநிலையம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் மீண்டும் விமானசேவை தொடங்குவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது.
36 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (17.10.2019) யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை அதிபர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னோட்ட சோதணையாக அலையன்ஸ் ஏா் விமானநிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பானம் பலாலி விமானநிலையத்திற்கு விமானத்தை இயக்கியது.
சென்னையிலிருந்து வந்த அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், பயணிகள் யாரும் அனுமதிக்கவில்லை.
இந்த விமானம் என்றிலிருந்து பயணிகள் விமானமாக ஓடத்தொடங்கும், தினசரி விமானமா அல்லது வாரத்தில் சில தினங்கள் இயக்கப்படுமா போன்றவைகள் குறித்து அடுத்த சில தினங்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று ஏா் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?