உலகம்
‘சார்ஜ்’ போட்ட செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இளம்பெண் பலி!
ரஷ்யாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார் சுல்யாதியேவா.
குளியலறையின் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் இருக்கும் மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார் அவர். பின்னர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. அதனால், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுல்யாதியேவாவின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.
இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சுல்யாதியேவாவின் தாய் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்தார். செல்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!