உலகம்
தங்கப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய இளவேனில் : முறையான வரவேற்பு தராத தமிழக அரசு !
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.
20 வயதே ஆன தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் கடந்தாண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில், சீனியர் பிரிவில் பங்கேற்ற முதல் சர்வதேச தொடரிலேயே தங்கம் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இளவேனில். இளவேனில் வாலறிவனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளவேனில் வாலறிவன் போட்டிகளை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். அப்போது அவரை வரவேற்கத் தமிழக அரசு சார்பாகவோ, ரைபிள் கிளப் சார்பாகவோ யாரும் செல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்க அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தங்கப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு பிறகு இளம் வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி'' தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!