உலகம்
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி அபராதம்! : ஏன் தெரியுமா?
சமூக வலைதளங்களில் இன்றளவும் பயனாளர்கள் அதிகம் விரும்புவது ஃபேஸ்புக் தான். உலகம் முழுவதும் பேஸ்புக்கை பல கோடிக் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும், வர்த்தக தேவைகளுக்கும் இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் 500 மில்லியன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் நிறுவனம் அனுமதியின்றி திருடி அரசியல் ஆலோசனைகளுக்காக வழங்கியதாக அண்மையில் குற்றம்சாட்டப்பட்டது.
தனிநபர்களின் தகவல்கள் திருடப்பட்டதை பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம் விசாரணையை தொடங்கியது. அப்போது விசாரணையில், பதில் அளித்த பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனம் திருடியது உண்மைதான் இந்த நடவடிக்கைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்திருந்தது.
இந்த விசாரணையில், கடந்த 2011ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்த நடவடிக்கையின் படி தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை எனும் உடன்பாட்டை ஃபேஸ்புக் நிறுவனம் மீறி செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்நிறுவனத்துக்கு சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப நிறுவனங்களில் இவ்வளவு பெரிய அபராத தொகையை செலுத்தவுள்ள முதல் நிறுவனம் ஃபேஸ்புக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?