உலகம்
லண்டன் ஐகோர்ட் தீர்ப்பால் மல்லையாவை நாடு கடத்துவதில் சிக்கல் நீடிப்பு!
முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில், ரூபாய் 9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவிலிருந்து தப்பி லண்டனில் வசித்து வருகிறார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரி, இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், மல்லையா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளால் தாமதம் ஏற்பட்டது.
மல்லையா தொடர்ந்த பல மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடியான நிலையில், லண்டன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளேர் மாண்ட்கோமெரியின் வாதங்களைக் கேட்ட நீதிமன்ற அமர்வு, நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்தது.
மல்லையாவின் மனு நிராகரிக்கப்பட்டால் 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழல் இருந்த நிலையில், லண்டன் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் இந்திய அரசுத் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !