உலகம்

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு வரி அதிகரிப்பு: இன்றுமுதல் அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அமெரிக்கா 25 விழுக்காடு வரை வரியை உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியாவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா அமெரிக்காவின் சில பொருட்களுக்கு வரியை உயர்த்தப்போவதாக கடந்தாண்டு அறிவித்தது. பின்னர் அமெரிக்க நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த நடவடிக்கையை இந்தியா ஒத்திவைத்தது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் இந்தியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அறிவிக்கப்பட்ட சுங்க வரி 16ம் தேதி முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் என குறிப்பிட்டிருந்தது. அதன்படி இன்று முதல் உயர்த்தப்பட்ட வரி நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதல் வரி மூலம் 217 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் இந்தியாவுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜூன் முதல் வாரத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இந்தியாவிற்கு அமெரிக்க அரசு வழங்கிவந்த வர்த்தக சிறப்புரிமை அந்தஸ்தை கடந்த வாரம் ஜுன் 5-ம் தேதி ரத்து செய்வதாக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதனால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.