உலகம்
ஈரான் பதற்றம்: 8 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை சவூதி-க்கு விற்க டிரம்ப் அனுமதி?
ஈரானின் பதற்ற சூழல் காரணமாக சவூதி நாட்டிற்கு 8 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விற்க அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பு "ஈரான் - அமெரிக்கா" ஒப்பந்தம் அனைத்திலும் இருந்து வெளியேறினார். பின்னர் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதன் மூலம் அமெரிக்கா ஈரான் நாட்டை நேரடியாக பிரச்னைக்கு இழுத்துவிட்டது. அதுமட்டுமின்றி தொடர்ந்து ஈரான் நாட்டிற்கு அச்சமூட்டும் வகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எதாவது மிரட்டல் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
ஈரான் நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதியையும் இந்தியா உட்பட எந்த நாடுகளும் செய்துகொள்ளக்கூடாது என நிர்பந்தித்துள்ளது. இந்த சூழலில் ஈரான் அரசும் அதிபர் டிரம்ப்க்கு அடிபணியாமல் சமாளித்து வருகிறது.
இதனிடையே ஈரானின் பதற்ற சூழல் காரணமாக சவூதி நாட்டிற்கு 8 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விற்றுள்ளதாக செய்திகள் தற்பொழுது வெளிவந்துள்ளன.
ஆயுதம் விற்பதற்கு அமெரிக்க காங்கிரஸ் அமைப்பிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் டிரம்ப் அனுமதி வாங்கவில்லை என பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயக அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவிக்கினறனர். அதிபர் டிரம்ப் ஈரான் அரசின் மீது ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை காரணம் காட்டி ஆயுதங்கள் விற்க அனுமதி வழங்கியுள்ளார் என அந்த அமைப்புகள் குற்றச்சாட்டியுள்ளன. இந்த சூழலில் ஈரான் நாட்டில் போர் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !