Viral

பாசமாக நெருங்கி வந்த தெரு நாய்.. அன்போடு கொஞ்சிய நபர்.. சட்டென்று பாய்ந்ததால் நேர்ந்த விபரீதம் - நடந்தது?

பொதுவாக மக்கள் பலருக்கும் விலங்குகள் பிடிக்கும். குறிப்பாக நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் மீது பலருக்கும் ஆர்வம் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய் விலங்குகள் ஆர்வலராக இருப்பவர்கள் தெருவில் செல்லும் நாய்களுக்கு எல்லாம் உணவு வைப்பர். இப்படி செய்யும்போது, நன்றியுடன் இருக்கும் அந்த விலங்குகள் சில நேரங்களில் உணவு வைத்த நபரை காப்பாற்றுவதும் நடைபெற்று வரும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, தெரு நாய்களுக்கு தினமும் உணவு வைத்து வந்த பெண்ணின் உயிரை, அந்த நாய்கள் காப்பற்றியது. இந்த சூழலில் தற்போது தெரு நாய் ஒன்றை அன்போடு தடவி கொடுத்த வாலிபரை அதே நாய் பாய்ந்து கடிக்க சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோவில், 2 வாலிபர்கள் காரின் அருகே நிற்கின்றனர். அதில் ஒருவர் தனது காரை துடைத்துக் கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த மற்றொரு நபரை நோக்கி அங்கிருந்த தெரு நாய் ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட அந்த நபரும் அந்த நாயை தடவி கொஞ்சியுள்ளார். அந்த நாயும் ஆரம்பத்தில் அந்த நபரிடம் செல்லமாக இருந்த நிலையில், திடீரென்று குஷியாக மாறி, அந்த நபர் மேல் ஏற முயன்றது.

அப்போதும் அந்த நபர் அந்த நாயை தடவி கொடுத்த நிலையில், திடீரென்று ஆக்ரோஷமான நாய், அந்த நபர் மீது கோபத்தில் பாய்ந்து கடிக்க முயன்றது. இதையடுத்து அங்கிருந்த மற்றொரு நபர் அந்த நாயை விரட்டியடித்துள்ளார். இந்த நாய் கடிக்க முயன்றதில், அந்த நபரின் கையில் இலேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. தெரு நாய்களுக்கு பொதுவாக ஊசி போடுவதில்லை என்பதால், அதனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.

Also Read: உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் : இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு அறிகுறி - ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்!