Viral

கோழியை ஒரேதாவில் கவ்விய சிறுத்தை : வைரலாகும் CCTV காட்சிகள்!

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தடாகம் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதிகள் கருஞ்சிறுத்தை உலா வந்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தடாகம் சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் மதில் மேல் இருந்து கோழியை சிறுத்தை கவ்விக் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருவள்ளுவர் நகர் பழனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது வீட்டின் மதில்மேல் வளர்ப்பு கோழி அமர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்குவந்த சிறுந்ததை ஒன்று ஒரு தாவில் கோழியை கவ்விக் கொண்டு சென்றது.

பின்னர் காலையில் காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, கோழியின் இறக்கைகள் வீட்டின் முன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோழியை சிறுத்த கவ்விச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இது குறித்து அக்குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அப்பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Also Read: மதுரையில் TTF வாசன் கைது : நடந்தது என்ன?