Viral
விபரீதமான விளையாட்டு... குளிக்கும்போது இளைஞருக்கு நேர்ந்த சோகம்... நீச்சல் குளத்துக்கு அதிகாரிகள் சீல் !
தற்போது கோடை காலம் என்பதால் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கு பொழுதுபோக்குக்கு என்று பல விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் பலரும் நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சல் பழகவும், விளையாடவும் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் மத்திய பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் விளையாட்டுத்தனமாக இளைஞர் ஒருவர் செய்த காரியத்தால், வேறு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ரத்லம் என்ற பகுதியில் 'டால்பின் நீச்சல் குளம்' இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் வந்து மகிழ்வர்.
அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இளைஞர்கள் சிலர் இங்கு குளித்து மகிழ வந்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் விளையாடுவதாக கூறி, பின்னிருந்து ஓடி வந்து நீச்சல் குளத்தில் சட்டென்று குதித்தார். அந்த சமயத்தில் அருகில் இருந்த இளைஞர் முகத்தில், இந்த இளைஞரின் கால் முட்டி சட்டென்று படவே, நீச்சல் குளத்தில் சரிந்து விழுந்தார்.
சரிந்து வீழ்ந்த இளைஞரை அருகில் இருப்பவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாததால், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சில நிமிடங்கள் கழித்தே இளைஞர் தண்ணீரில் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர் அவரை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள் சோதனையில் அந்த இளைஞர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவம் ஏற்கனவே ஒரு முறை நடைபெற்ற நிலையில், தற்போது 2-வது முறையாக நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்