Viral

“துரித உணவுகளால் புற்றுநோய்க்கு வாய்ப்பு”: உணவுப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்கள்! Special news

உணவுகளின் உலகம் என்றால் அது தமிழ்நாடு என்று கூறலாம். அந்த அளவிற்கு தமிழரின் உணவு வகைகள் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகள் மேலை நாட்டினராலும் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, செட்டிநாடு சமையல் , கொங்கு முறை சமையல், மணமணக்கும் மதுரை கிடா விருந்து. இப்படி ஒவ்வொரு பகுதிக்குமான மிகச்சிறந்த நாவினை நாட்டியமாடும் உடல் நலத்தையும் பேணும் எத்தனையோ வீட்டு முறை சமையில் தமிழர் கைதேர்ந்தவர்கள் என்பதே நிதர்சனம்.

அசைவ உணவில் மட்டுமல்ல, சைவத்திலும் பாரம்பரிய உணவு வகைகளில் கேப்பை கூழ் , கம்பங்கூழ், பனியாரம், மூலிகை தோசை வகைகள், பொங்கல், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். காலங்கள் மாற மாற கல்வி, தொழில் என பல்துறையிலும் வளர்ச்சி பெற்ற நாம், காலத்திற்கு ஏற்ப நாகரீக கலாச்சாரம் என்ற பெயரில், மெல்ல மேலை நாட்டு கலச்சாரத்தில் மூழ்க துவங்கி தற்பொழுது மீளாவிட்டால் எப்போது இளைய தலைமுறையினர் சிலர் மீண்டும் பழமையை நோக்கி நகர துவங்க பலர் கலாச்சாரம் என்ற பெயரில் துரித உணவினை எடுத்துக்கொள்வது தான் பெருமை என்ற அளவிற்கே செல்ல வீதியெங்கும் துரித உணவங்கள் முளைத்து விட்டது.

சிறியவர்கள் துவங்கி முதியவர்கள் என அனைத்து தரப்பினர் துரித உணவினை நேரம் காலமின்றி நள்ளிரவிலும் அதிகாலையிலும் கூட உண்ணும் கலாச்சாரம் இப்போது பெருகிவிட்டது என்றே கூறலாம் அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவிலும் கொடிக்கட்டி பறக்கிறது துரித உணவு விற்பனை.

கலச்சாரம் என்ற பெயரில் துரித உணவினை எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் தொடர்பு அதிகாரி மருத்துவர் ஆனந்த்குமார் விளக்குகிறார். அப்போது அவர் கூறுகையில், “தொடர்ச்சியாக துரித உணவுகளை எடுத்துக்கொள்வதால் இருதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகிறது. சாலையோர உணவகமாக இருந்தாலு அங்கு நம்முடைய வழக்கமான உணவு வகைகளை அங்கு சுகாதாரமாக இருந்தால் அதனை உண்ணலாம்.

ஆனால் அதை விடுத்து துரித உணவுகளில் அதிக உப்பு, நிறமூட்டிகள் உள்ளதால் அதனை தொடர்ச்சியாக உண்ணும் போது, உயர் இரத்த அழுத்தம், ஸ்டோக் வரலாம். அதேபோல் அங்கு முன்கூட்டியே காய்கறிகளை வெட்டி வைப்பதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எப்போதாவது இப்படி சாப்பிட்டால் பரவாயில்லை. அதையே பழக்கமாவது சரியல்ல” என்கிறார்.

மேலும் கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனை குடல், வயிறு, கல்லீரல் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் மலர்விழியிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், இளம் பருவதினர் வளர் இளம் பருவத்தினர் அதிகளவு புற்றுநோயால் பாதிக்கப்படுவது தற்பொழுது அதிகரித்துள்ளது. உணவு முறை என்பது ஒரு ஒழுக்கம் உடனடியாக கிடைக்கிறது என்பதற்காக வாங்கக்கூடாது வீட்டில் சமைத்து உண்பதே சிறந்தது.

துரித உணவுகளால் அமிலத்தன்மை அதிகரித்து, குடல் புண் வரலாம். மேலும் உணவு பொருட்களை குளிரூட்டில் நீண்ட நாள் பாதுக்காப்பதால் குடல் புற்று நோயை ஏற்படுத்தும் எனவும் நெஞ்சு எரிச்சல் நார் சத்து குறைந்து மலச்சிக்கல் ஏற்படும். மலக்குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. இப்போது உள்ள சூழலில் மலக்குடல் புற்று நோய் அதிகரித்துள்ளது.

மேலும் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து அதில் புற்று நோய் , கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம். துரித உணவுகளில் உள்ள பொருட்கள் நல்ல பாக்டீரியைவை அழிக்கிறது செரிமான கோளாறு ஏற்படும். மைதா அதிகம் பயன்படுத்துவதால் அது சத்து இல்லாதது. மேலும் குழந்தைகள் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுத்தும். இளம் பருவத்தில் இது மிகப்பெரிய பிரச்சனை” எனத் தெரிவித்துள்ளார்.

துரித உணவுகளாலும் அதில் சேர்க்கப்படும் சுவைஊட்டக்கூடிய உப்புக்கள் நிறமூட்டிகள் உள்ளிட்டவை நம்மை ஆட்கொண்டு அதற்கு அடிமைப்படுத்துகிறது. மேலும் கலாச்சாரம் என்ற பெயரில் அடுப்பங்கரை மறந்து அவசரகதியில் உண்ணும் உணவினால் இயலாமை இன்முகத்தோடு வரவேற்கிறோம் என்பதே எதார்த்த உண்மை.

எத்தனை எத்தனையோ உணவுகளை உலகிற்கு கொடுத்தவர்கள் நாம் கலாச்சாரம் என்பதின் மறு பெயர் தமிழ்நாடு தான். நாகரிக வளர்ச்சியின் பெயரில் துரித உணவுகளை எடுத்து கலாச்சாரம் என்ற பெயரில் நம்மை நாமே சீர் கெடுத்துக் கொள்கிறோம் என்பது கவலைக்குரிய ஒன்றாகும். துரித உணவுகளை நாடாமல் நம்முடைய பாரம்பரிய உணவுகளை உண்போம் அடுப்பங்கரையை மீட்டெடுப்போம் அழகியதோர் உலகம் படைப்போம்.

- செய்தியாளர் : மாரியப்பன்.

Also Read: “ரூ.65 கோடியில் புதிய கட்டடம்... உலக தரத்திற்கு உயரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை” : சிறப்புச் செய்தி!