Viral

உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு : இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமேசான் காட்டில் மிகப்பெரிய பச்சை நிற அனகோண்டா பாம்பு இருப்பதாக விஞ்ஞானிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 14 விஞ்ஞானிகள் அமேசான் காட்டில் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த குழுவில் ப்ரீக் வோங்க் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர்களது தேடுதலுக்குப் பிறகு மிகப் பெரிய அனகோண்டா பாம்பைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ப்ரீக் வோங்க் அனகோண்டா பாம்பு கண்டு பிடித்ததைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தண்ணீருக்கு அடியில் மிகப் பெரிய அனகோண்டா பாம்பு இருப்பதைக் காட்டுகிறது. மேலும் அவரது பதிவில், "நான் பார்த்த மிகப்பெரிய அனகோண்டாவை வீடியோவில் காணலாம், இது பிரேசிலில் உள்ள ஒரு பச்சை அனகோண்டா. கார் டயரைப் போல தடிமனாகவும், என் தலையைப் போல பெரிய தலையுடனும். உயரத்தை மதிப்பிடுவது கடினம். ஆனால் 196 செ.மீ உயரம் இருக்கும்.

இதற்கு முன்பு இவ்வளவு பெரிய அனகோண்டாவை பார்த்தது இல்லை. நான் இதற்கு முன்பு ஒரு புதிய இனத்தைக் கண்டுபிடித்தேன், ஆனால் அது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு சிறிய அனகோண்டா. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடுகளுடன் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஆராய்ச்சி வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ ஓடிய ரயில் : பெரும் விபத்து தவிர்ப்பு - நடந்தது என்ன?