Viral
ஹெல்மெட் அணியாமல் வந்ததால் பிடித்த போலிஸ்... கையை கடித்ததால் கம்பி எண்ணும் இளைஞர் - கர்நாடகத்தில் ஷாக் !
'தலைக்கவசம் உயிர்கவசம்' என்ற வாசகம் அனைவருக்கும் பொருந்தும். வாகனங்களில் செல்வோர் தங்கள் உயிரை பாதுகாக்கும் விதமாக அதற்கு தேவையான பாதுகாப்பு கவசத்தை அணிய வேண்டும். பைக்கில் செல்வோர் ஹெல்மெட், காரில் செல்வோர் சீட் பெல்ட் உள்ளிட்டவை கட்டாயம் அணிய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் உயிருக்கு மட்டுமின்றி அடுத்தவர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல், அதி வேகமாக செல்வோர் உள்ளிட்டவை யாரேனும் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் சாலை விதிகளை மீறுவதால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் சிலர் இந்த தவறை மறுபடி மறுபடி செய்கின்றனர். இதனால் இந்தியா முழுவதுமுள்ள அந்தந்த மாநில அரசுகள் இதற்கு அண்மைக்காலமாக கெடுபிடி வைக்கின்றது. மேலும் யாரேனும் அதீத வேகத்தில் சென்றாலோ அல்லது சிக்னலை மதிக்காமல் சென்றாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் ஏதேனும் சாலை விதிகளை மீறி சென்றாலோ அவர்களை அந்தந்த ட்ராபிக் சிக்னலில் இருக்கும் கேமராக்கள் காட்டி கொடுத்துவிடும். அதன்படி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
எனினும் சிலர் விதிமீறல்களை மீறி நடந்துக் கொள்கின்றனர். இதனால் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவில் சாலை விதிகளை மீறிய இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், போலீசார் கையை அந்த இளைஞர் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வில்சன் கார்டன் அருகே வழக்கம்போல் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் தனது இரு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார், அவருக்கு அபராதம் விதித்தனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எனவே அந்த போலீஸ் இளைஞரின் பைக்கில் இருந்து சாவியை எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் போக்குவரத்து போலீசாரின் கையை சட்டென்று கடித்தார். இளைஞர் தகராறு குறித்த வீடியோவை அருகில் இருந்த மற்றொரு போலீசார் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உதவியாக இருந்தது.
இதையடுத்து போலீசாரை கடித்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர் சையத் ரபி என்று தெரியவந்தது. அவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் கையை இளைஞர் கடித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!