Viral

16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம்... சட்டென்று பெயர்ந்த கதவு... பதறிய பயணிகள் - பிறகு நடந்தது என்ன ?

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் பல்வேறு விமானங்களை இயக்கி வருகிறது. அமெரிக்காவின் பெரிய விமானச் சேவை நிறுவனங்களில் ஏழாவது இடத்தை பெற்றுள்ள இந்த நிறுவனம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் பறந்து கொண்டிருந்தபோதே, திடீரென கதவு பெயர்ந்து பறந்துள்ளது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று மாலை புறப்பட்டது. சுமார் 171 பயணிகள், 63 ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் மெல்ல மெல்ல மேலே பறந்தது. அப்போது சுமார் 16,000 அடி உயரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது , திடீரென விமானத்தின் மைய பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து கதவு ஒன்று பறந்து சென்றுள்ளதால் பயணிகள் அலறினர். தொடர்ந்து அலறல் சத்தத்தை கேட்டு வந்த ஊழியர்கள், இதுகுறித்து விமான கட்டுப்பாடு மையத்துக்கு தெரிவித்தனர். தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை கருதி, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்த 171 பயணிகள், 63 ஊழியர்கள் என யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் முதல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்த போயிங் ரக விமானம் இதுவரை 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிகழ்வு குறித்து அதிகரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் நடு பகுதியில் உள்ள கதவு பெயர்ந்து பறந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.

Also Read: ரூ.3.32 லட்சத்தை விழுங்கிய வளர்ப்பு நாய்... கதறிய இளம்பெண்... பிறகு நடந்தது என்ன ?