Viral
இன்றும் நீங்காத சுனாமி கோரத்தாண்டவம் : 19ம் ஆண்டு நினைவு தினம் - பொதுமக்கள் அஞ்சலி!
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் கோரத் தாண்டவமாடியது.
இந்தோனேசியா, இந்தியா மட்டுமல்லாது மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோரப் பகுதிகளையும் தாக்கி, அங்கிருந்த மக்களை வாரிச் சுருட்டியது சுனாமி. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
சுனாமியால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கோரத்தாண்டவத்தின் சுவடுகள் 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மக்கள் மனதில் நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இன்று சுனாமியின் 19ம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள நொச்சிக்குப்பம் பகுதியில், அப்பகுதி மக்கள் நினைவு தினத்தை அனுசரித்தனர். மேலும் மயிலாப்பூர் திமுக எம்.எல்.ஏ த.வேலு பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடியில் அண்ணா சங்கு குழி தொழிலாளர் சங்கம் சார்பில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கடலில் மலர் தூவி பால்ஊற்றி அஞ்சலி செலித்தினார்கள்.
அதேபோல், கடலூர் சிங்காரத்தோப்பு பாலத்தில் இருந்து சோணங்குப்பம் கடற்கரை வரை ஊர்வலமாக வந்து கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி. 118 பேர் அடக்கம் செய்யப்பட்ட மணக்குடி மீனவ கிராமத்தில் அஞ்சலி. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இப்படி தமிழ்நாடு முழுவதும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !