Viral
14 நாட்களாக தொடரும் போராட்டம் - சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
உத்தரகாண்ட மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில், சுரங்கத்துக்குள், 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த 41 பேரையும் மீட்க கடந்த 10 நாட்களாகப் பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 6 அங்குல குழாய் அமைத்து, 10 நாட்களாகத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், சுரங்கப் பாதையில் சிக்கிய 41 பேர் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்பு படையினர் அவர்களுடன் பேசி வருகின்றனர். 14 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்திப்பார்கள் என்றும் அவர்கள் மீட்கப்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன வென்று பார்ப்போம்:-
சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்கு ஆழ்ந்த கவலை. அமைதியின்மை அதிகரிக்கும்.விரக்தி உணர்வு ஏற்படும். இல்லாத விஷங்களைப் பார்ப்பது அல்லது ஒலிகளைக் கேட்பது போன்ற மாயை ஏற்படும்.
பயமுறுத்தும் வடிவங்கள் அல்லது குரல்கள் மூளையில் எதிரொலிக்கலாம். உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். சிந்தனை முற்றிலும் கட்டுப்பாடற்றதாகிவிடும். உடலில் ரத்த ஆக்சிஜன் அளவு குறையும். நீரழிப்பு காரணமாக உடலில் தாதுக்கள் குறையும். இதனால் சோர்வாக இருப்பார்கள்.
தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பிறகும் அவர்களுக்குச் சுரங்கத்தில் உள்ளே இருந்த அதிர்ச்சி நீண்ட நாட்களுக்கு இருக்கும். மன உளைச்சல் இருக்கும். என தொழிலாளர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது ஆசியமானதாகும். 41 தொழிலாளர்களும் உயிருடன் எப்போது வெளியே வருவார்கள் என்பதை இந்திய நாடே காத்துக் கொண்டிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!