Viral
iPhone 15 வாங்க 2 மூட்டை சாக்கு பையில் சில்லறைகளுடன் கடைக்கு வந்த இளைஞர்: இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனியார் மொபைல் கடை ஒன்று அமைந்துள்ளது. ஐ-போன் விற்பனை கதையான இங்கு, பிச்சைக்காரர் ஒருவர் வந்துள்ளார். அங்கே வந்த அவர், தன்னிடம் இருந்த சில்லறை காசுகளை கொடுத்து ஐ-போன் 15 ரக போனை பெற்று சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் பிச்சைக்காரர் போல் கிழிந்த அழுக்கு துணியுடன் இருக்கிறார்; மேலும் அவர் தனது கையில் ஒரு பெரிய பையில் 2 சாக்கு மூட்டைகளை வைத்திருக்கிறார். தொடர்ந்து அதே கோலத்தோடு அந்த பகுதியில் இருக்கும் 'தீபக்' என்ற போன் கடைக்கு செல்கிறார். அவரை கண்டதும், அந்த கடையின் ஊழியர்கள் முதலில் துரத்துகின்றனர்.
தொடர்ந்து அவர் இந்தியில் பேச, மீண்டும் மீண்டும் அவரை விரட்டுவதிலே அந்த ஊழியர்கள் முனைப்பு காட்டுகின்றனர். அப்போது இதனை கண்ட அந்த கடையின் உரிமையாளர், அவரை உள்ளே விடும்படி கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், தான் ஐ-போன் வாங்க வந்திருப்பதாக கூறினார். இதனை கேட்டதும் சற்று யோசித்த அவர், அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தன்னிடம் போன் வாங்க தேவையான பணம் சில்லறைகளாக இருப்பதாக கூறி, தான் கொண்டு வந்த சாக்கு மூட்டையில் உள்ள சில்லறைகளை ஒரு ஓரமாக தரையில் கொட்டினார். பின்னர் அவயனைத்தையும் ஊழியர்கள் எண்ணினர். தொடர்ந்து அந்த பணத்தை பெற்றுக்கொண்ட கடையின் உரிமையாளர், அவர் கேட்ட ஐ-போன் மொபைலை அந்த இளைஞருக்கு வழங்கினார்.
கடந்த 5-ம் தேதி வெளியான இந்த வீடியோ அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் இது ஒரு ஸ்கிரிப்ட் வீடியோ என்றும், தற்போது எந்த ஒரு பிச்சைக்காரரும் இதுபோல் இருப்பதில்லை என்றும், பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். எனினும் ஒருவரது தோற்றத்தை வைத்து எடை போட கூடாது என்பதையே இந்த காணொளி காட்சி வாயிலாக நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நிசப்தமான உண்மை.
தொடர்ந்து யார் எப்படி வந்தாலும் உள்ளே யார் விடுகிறார்கள் என்பதை அறியவே பிச்சைக்காரர் போல் வேடமணிந்து வந்ததாக அந்த இளைஞர் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ள இந்த வீடியோ சுமார் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த இளைஞர் 'experiment_king' என்ற இன்ஸ்டா பக்கத்தில் இதுபோல் அதிகமான வீடியோக்களை பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!