Viral
உலகக்கோப்பை INDvsPAK : 1 நிமிடத்தில் 250 பிரியாணி.. 1 லட்சம் Cool Drinks.. - Swiggy வெளியிட்ட தகவல் !
இந்தியாவில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய முன்தினம் (14.10.2023) நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது.
இதில் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது. இதனால் 192 ரன்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் ஆட்டத்தால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அபார வெற்றியை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த போட்டியின்போது ரசிகர்கள் சிலர் ஸ்டேடியத்திலும் பலர் வீட்டிலும் இருந்தவாறே கண்டு ரசித்தனர். பொதுவாகவே கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா விளையாடும்போது ரசிகர்கள் தங்களை மறந்து, வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருவர். நேற்றைய முன்தினம் நடந்த போட்டியை சொல்லவா வேண்டும் ? உலகக்கோப்பை, அதுவும் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் போட்டி.
எனவே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த போட்டியை கண்டு ரசித்தனர். இந்த சூழலில் போட்டி நடைபெற்ற அன்று, 1 நிமிடத்தில் 250 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தவாறே, தங்களுக்கு விருப்பமான உணவு பண்டங்களை ஆர்டர் செய்துள்ளனர்.
அதில் ஸ்விக்கியில் 1 நிமிடத்தில் 250 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்திற்கு மேல் கூல் ட்ரிங்ஸ், 19 ஆயிரத்துக்கும் மேல் பச்சை மற்றும் நீல கலர் 'Lays' பாக்கெட், 3,509 ஆணுறைகள் விற்பனையாகியுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. அதில் சண்டீகரில் உள்ள ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் 86 வடபாவ்களை ஆர்டர் செய்துள்ளார். இவையனைத்தும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!