Viral
நிலவை அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடிவு.. இஸ்ரோவின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் என்ன?
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டிருந்தது. பின்னர் 6.04 மணியளியில் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என உறுதியுடன் இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இதன்படி நேற்று மாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமான நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.
இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. அதே நேரம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா படைத்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து புகைப்படத்தையும் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த மகத்தான வெற்றியை அடுத்து இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்:-
1.சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலத்தை அடுத்த மாதம் அனுப்பத் திட்டம். இந்த விண்கலம் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து சூரியனைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும்.
2.செவ்வாய்க் கிரகத்தை மேலும் ஆய்வு செய்ய அடுத்தாண்டு மங்கள்யான் 2 விண்கலம் அனுப்பப்பட உள்ளது.
3.ககன்யான் 1 என்ற பெயரில் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படவும் திட்டம். ககன்யான் 1ஐ தொடர்ந்து ககன்யான் 2 விண்கலம் மனிதர்களுடன் விண்வெளிக்கு அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
4. சுக்ரயான் என்ற பெயரில் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!