Viral
’நான் வீட்டுக்கு போனும்’.. அரசு பேருந்தை ஜாலியாக ஒட்டிச்சென்ற நபர் : அடுத்துக் காத்திருந்த அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்திற்கு உட்பட்ட அவுராத் நகரில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியவம்சி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தொழிற்சாலையில் பணியை முடித்து விட்டு மதுக்கடைக்கு சென்று மதுக்குடித்துள்ளார். பின்னர் போதையில் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்குத் தனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்தை தேடி பார்த்துள்ளார். ஆனால் அங்கு பேருந்து இல்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து சென்று விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனால் போதையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி வந்துள்ளார். பிறகு அங்குத் தனியாக நின்றிருந்த அரசு பேருந்தில் ஏறி, பேருந்தை இயக்கியுள்ளார்.
பின்னர் நல்ல போதையில் இருந்ததால் பேருந்தைச் சரிவர இயக்க முடியாமல் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு வந்த போலிஸார் சூரியவம்சியை பிடித்து விசாரித்தனர். இதில் போதையில் ஊருக்குச் செல்வதற்காக அரசு பேருந்து எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் கிராமத்திற்குச் செல்ல அரசு பேருந்து ஒட்டிமுயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!