Viral
என்ன ஒரு கயிறு கட்டிலின் விலை ரூ.1 லட்சமா?... இணையவாசிகளை தலைசுற்றவைத்த இ-காமர்ஸ் தளம்!
உலகம் முழுவதும் இ-காமர்ஸ் தளம் செயல்பட்டு வருகிறது. இதில் உணவு பொருட்கள் முதல் விளையாட்டு பொருட்கள் வரை அனைத்தும் விற்கப்பட்டு வருகிறது. தற்போது கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதை விட இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்குவது அதிகரித்து விட்டது.
மேலும் பழைய பொருட்களை விற்பதற்கான இ காமர்ஸ் தளங்களும் செயல்படுகின்றன. இப்படி பல இ காமர்ஸ் தளங்கள் இருந்தாலும் போலியான இ காமர்ஸ் தளங்களும் இணையத்தில் உள்ளது. இதில் மக்கள் பணத்தை பறிகொடுக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இ காமர்ஸ் தளம் ஒன்றில் இந்தியாவின் பாரம்பரிய கட்டில் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக இணையத்தில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. இதை முதலில் பார்க்கும் போது நமக்கு தவறான செய்து என்று தெரியும்.
ஆனால், Etsy என்ற இ காமர்ஸ் தளத்தில் இந்தியாவின் பாரம்பரிய கயிறு கட்டில் ரூ.1,12,039 விற்பனை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை கொடுத்து யாராவது கயிறு கட்டிலை வாங்குவார்களான என நினைத்தால், இன்னும் 4 கட்டில்கள் தான் இருக்கிறது என்றும் அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த அற்புதமான படுக்கையை நீங்கள் தனித்துவமான அலங்காரத்திற்காகப் பயன்படுத்தலாம், இது எந்த வகையான அறைக்கும் மற்றும் வெளிப்புறங்களுக்கும் உட்புறங்களுக்கும் ஏற்றது என்று இந்த தளத்தில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் "அகலம்: 36 அங்குலம், உயரம்: 72 அங்குலம், ஆழம்: 18 அங்குலம் என கட்டிலின் முழு விவரங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பலரும் இணைத்தில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !