Viral
ரஜினி முதல் பாக். கேப்டன் பாபர் அசாம் வரை.. ப்ளூ டிக்கை நீக்கிய எலான் மஸ்க்: பிரபலங்களின் ரியாக்ஷன் என்ன?
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாக கைப்பற்றியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்னர் அதில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர எண்ணி, முதல் வேளையாக ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50% ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். மாத சந்தா செலுத்தக் கூடிய யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் திருத்தம் செய்திருந்ததால் சந்தா கட்டிய எல்லாருக்கும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.
ஆனால் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பெயரில் போலி ப்ளூ டிக் கொண்ட கணக்குகள் வலம்வருவது ட்விட்டர் மீதான நம்பிக்கையை குலைத்ததால் ப்ளூ டிக்' சந்தா வழங்குவதை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது. அதனைத் தொடந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் சேவை மீண்டும் அமல்படுத்தப்பட்டு சாதாரண வாடிக்கையாளர்கள் 9 டாலர் கொடுத்ததும் ஐபோன் சந்தாதாரர்கள் 11 டாலர்கள் கொடுத்தும் இந்த சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல், மாத சந்தாதாரர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது ப்ளூ டிக் வாங்காத அனைவரின் கணக்கில் இருந்தும் டிக் நீக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, யோகி ஆதித்யநாத், பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த், விஜய், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, விக்ரம், திரிஷா, சுருதிஹாசன், பிரகாஷ் ராஜ், லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர், ஏ ஆர் ரஹ்மான், ஜி வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், நட்சத்திர வீரர்களான தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம், ரொனால்டோ உள்ளிட்ட பலரது ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இதனை இணையாவசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். ட்விட்டரில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது குறித்து கிண்டலடித்து வரும் நிலையில், சில பிரபலங்களும் அதனை டேக் இட் ஈசியாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “Be bye Blue Tick… உங்களுடன் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. என் பயணம்.. எனது உரையாடல்கள்.. எனது பகிர்வு… என் மக்களுடன் தொடரும்… உங்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ரிக்கி ஜெராவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் ப்ளூ டிக் போய்விட்டது. உண்மையில் இது நானா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான பாபர் அசாமின் ரசிகர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்விட்டர் மிகவும் வேடிக்கையான இடம். பாபர் அசாம் ரசிகர் கணக்கில் ப்ளூ டிக் உள்ளது. ஆனால் பாபர் அசாமிடம் இல்லை" என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டர் பயனர் ஒருவர், “எனது கணக்கில் ப்ளூ டிக் உள்ளது, ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் SRK க்கு அது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியாக பலரும் தங்கள் வேடிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!