Viral
அழகான உதடுக்கு ஆசைப்பட்ட இளம்பெண்.. இலவசமாக கிடைத்த Lip Filler மூலம் நேர்ந்த சோகம்.. குமுறும் மாடல் அழகி!
தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் உட்பட அனைவரும் தங்களை அழகாக காட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். குறிப்பாக பிரபலமாக இருப்பவர்கள் இதற்காக அதிகமாக முயற்சி மேற்கொள்கின்றனர். அதற்காக எந்த க்ரீம் வேண்டுமானாலும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு ஏதெனும் பின்விளைவு கூட ஏற்படும்.
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்ப சிலர், தங்கள் அழகை மேலும் அழகாக்க எண்ணி, இருப்பதும் போன கதையாக மாறிவிடுகிறது. முகத்தை அழகாக்க எண்ணிய இளம்பெண் அதற்கான அறுவை சிகிக்சை மேற்கொண்டபோது, அது மோசமாக ஆன செய்திகளும் வெளியாகியது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் மாற எண்ணிய இளம்பெண் அதற்காக பல முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனது முகத்தை கோரமாக மாற்றிய சொத்துக்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதுபோல் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதிலும், முக அழகை பாதுகாப்பதிலும் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக உதடு, முகம், மார்பகம் உள்ளிட்டவற்றை பேணுவதற்காக பெண்கள் ஊசி செலுத்தி கொள்கின்றனர். இதுபோன்ற ஸ்டீராய்டு ஊசி உடலுக்கு கேடு என்று பலரும் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், சிலர் அதனை கண்டுகிறதே கிடையாது. அந்த வகையில் தனது உதட்டை அழகாக்க எண்ணிய மாடல் அழகி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, அது ஒரு விஷ பரீட்சையாக முடிந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெசிக்கா புர்கோ. இளம்பெண்ணான இவர், மாடல் அழகியாகி இருந்து வருகிறார். இவரது தனது உதட்டை அழகாகவும், கவர்ச்சியாகவும் மாற்ற எண்ணியுள்ளார். எனவே அதற்காக மருத்துவமனை ஒன்றில் Lip Filler என்று சொல்லப்படும் உதட்டில் ஊசி செலுத்தும் சிகிச்சையை பெற்று வந்துள்ளார்.
சுமார் 6 முறை இந்த சிகிச்சையை பெற்று வந்த இவருக்கு அண்மையில் அவரது மருத்துவர் ஒரு ஆஃபர் கொடுத்துள்ளார். அதாவது புது மாடல் லிப் ஃபில்லர் வந்துள்ளது என்றும், அதனை இலவசமாக தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆர்வமாக அந்த பெண் சென்றுள்ளார். ஆனால் ஊசி செலுத்திய சில நிமிடங்களிலே அவரது உதடு மாறுவதை உணர்ந்துள்ளார்.
பின்னர் நேரமாக நேரமாக அவரது உதடு பெரிதளவில் வாங்கியுள்ளது. இதையடுத்து அவர் இதுகுறித்து மருத்துவமனைக்கு தெரிவித்ததோடு இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அந்த வீடியோவில் இனி இதுபோல் யாரும் விபரீதமாக செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதுபோன்ற நிகழு ஏற்பட்டதும் அந்த ஊசியை செலுத்துவதை நிறுத்தி கொண்டதாக கூறிய அவர், இதுபோல் செய்யும் முன்பு நன்கு அறிந்த பின் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பேசு பொருளாக மாறியதோடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கூட கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது திருமணத்துக்காக பியூட்டி பார்லர் சென்று மேக் அப் போட்டபோது, அவரது முகம் கருமை நிறமாக மாறி, வீங்கியதால் திருமணமே நின்று போன சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!