Viral
Ambulanceல் வைத்து பொது தேர்வு எழுதிய மும்பை மாணவி.. சாலையில் சென்ற வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால் சோகம் !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது பந்த்ரா என்ற பகுதி. இங்கு அஞ்சுமன் ஐ இஸ்லாம் என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. மாணவிகள் பலரும் பயிலும் இந்த பள்ளியில் முபாஷிரா சாதிக் சையத் என்ற 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நன்றாக படிக்கும் இந்த மாணவி நல்ல மதிப்பெண்களும் பெற்று வருகிறார். இந்த சூழலில் அங்கு 10-ம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த தேர்வு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த சூழலில் இவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மாணவி, தனது அறிவியல் தேர்வு எழுதி முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு கார் ஒன்று வந்துள்ளது. இந்த சிறுமி சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் சரிந்து விழுந்த சிறுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுமியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து அவரை 20 நாட்கள் இடத்தை விட்டு நகரக்கூடாது என்றும், நடக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் சிறுமி தனது தேர்வை எழுத ஆர்வம் காட்டியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும், தனது தேர்வை எழுதியே தீருவேன் என்று வீட்டிலுள்ளவர்களை சமாதானம் செய்துள்ளார். பின்னர் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு மாணவி தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாணவி ஆம்புலன்சில் படுத்துக்கொண்டே, தேர்வுக்கான விடையை கூற கூற, ஒருவரை வைத்து எழுத வைத்துள்ளனர். விபத்தில் சிக்கியபோதிலும் தனது தேர்வை எழுத ஆர்வம் காட்டிய சிறுமிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாணவி மீதமுள்ள தேர்வுகளையும் எழுதுவார் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவி ஒருவர் ஆம்புலன்சில் வைத்து ஆசிரியர் ஒருவர் உதவியோடு எழுதியுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!