Viral
‘ஏய் எப்புட்றா..’ - டாக்டர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. 294 கிலோவில் இருந்து 165 கிலோவாக குறைந்த நபர் !
ஒரு மனிதருக்கு எடை கூடுதல், குறைத்தல் என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருக்கும். சிலர் குண்டாக இருப்பர்; சிலர் ஒல்லியாக இருப்பர். இருப்பினும் ஒல்லியாக இருப்பவர் குண்டாகவும், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும் ஆசை படுவர்.
ஆனால் இந்த இருவரும் மற்றவர்களால் கிண்டலுக்கு உள்ளாவர். குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் பலரது கேலி கிண்டலுக்கு உள்ளாகி மனதளவில் பெரும் வேதனை அனுபவிப்பர். இவ்வாறு பாடி ஷேமிங் செய்வதன் மூலம் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர். இதனாலே சிலர் எடையை குறைப்பதில் முனைப்பு காட்டி வருவர். ஆனால் இங்கு ஒருவரோ உயிருக்கு பயந்து தனது எடையை சுமார் 100 கிலோவுக்கு மேலே குறைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் நிக்கோலஸ் கிராஃப்ட் (Nicholas Craft). 42 வயதுடைய இவர் சுமார் 294 வரை எடையில் இருந்துள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே எடை கூடி வந்திருக்கிறது. ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதை நிக், நாளுக்கு நாள் எடை கூடியுள்ளார். உணவு பிரியராக இருக்கும் இவர், நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் உள்ளிட்டவைகளை உண்டு வந்துள்ளார்.
இவர் தனது 17 வயதிலே சுமார் 136 கிலோ வரை இருந்துள்ளார். தொடர்ந்து நாளுக்கு நாள் இவரது எடை அதிகரிக்கவே, இவர் பல கேலிக்கைகளுக்கு உள்ளானார். பொது போக்குவரத்து செய்யமுடியாமல் தவித்துள்ளார். பார்க்கும் இடங்களில் எல்லாம் இவரது உடல் உருவத்தை கேலி செய்து வந்துள்ளனர். மேலும் இவர் இதனால் மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளனர்.
இருப்பினும் இவர் தனது எடையை குறைக்க பெரிதாக ஆர்வம் காட்டியது இல்லை. யார் என்ன சொன்ன என்ன? என்ற போக்கில் தனது வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார். இப்படியே இருந்த இவர் கிட்டதட்ட தனது 40 வயதில் சுமார் 294 கிலோ வரை எடை கூடியுள்ளார். இதனால் அவர் உடலளவிலும் சில சிக்கல்களை சந்தித்துள்ளார். குறிப்பாக மூச்சு விடுவதில் இவருக்கு சிரமம் இருந்துள்ளது.
இதையடுத்து கடந்த 2019-ல் நிக் மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்போது அவரை சோதனை செய்த மருத்துவர்கள் இப்படியே எடை கூடிக்கொண்டே போனால், இன்னும்ஹ் 3- 5 வருடங்களில் உயிரிழந்து விடுவீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் பயந்துபோன நிக் தனது எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று பெரும் ஆர்வம் காட்டியுள்ளார்.
தொடர்ந்து இதற்காக டயட் பின்பற்றி வந்துள்ளார். குறிப்பாக நொறுக்கு தீனி, பாஸ்ட் புட், அரிசி உள்ளிட்ட கார்போ ஹைட்ரேட் உணவுகளை அறவே ஒதுக்கியுள்ளார். மேலும் உணவாக பழங்கள், தானியங்கள் உள்ளிட்டவையை உண்டு வந்துள்ளார். இது மட்டுமின்றி, உடற் பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு 2019-ல் இருந்து தொடர்ந்து அவர் ஆட்மன் சிம்பு போல் கடுமையாக தனது வேலைகளை செய்து வந்துள்ளார். அதன் எதிரொலியாக சுமார் 3 ஆண்டுகளில் 294 கிலோவில் இருந்து 165 கிலோவாக தனது எடையை குறைத்துள்ளார். இது குறித்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து பேசிய நிக்கோலஸ், "எடை அதிகரிப்பால் நான் பல இன்னல்களை சந்தித்தேன். ஆரம்பத்தில் பெரிதாக இதனை எடுத்துக்கொள்ளாமல் இருந்ததால் பல கிலோ வரை கூடினேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு மூச்சு விடுவது உள்ளிட்ட சில உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தது. இதனால் மருத்துவரை அணுகினேன்.
அவர் என்னிடம் 'வெடிக்கும் தருணம் வந்துவிட்டது' (ticking time bomb)என்றார். அதாவது 'இப்படியே ஊதிக்கொண்டே போனால் வெடித்து விடுவாய்' என்று மருத்துவர் எச்சரித்தார். இதனாலே நான் எனது எடையை கடும் முயற்சிகள் மேற்கொண்டு குறைத்து வருகிறேன். எனக்கு தொடர்ந்து உறுதுணையாக எனது பாட்டி ஜார்ஜியா மூடி இருந்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இப்போது அவர் என்னை பார்த்தால் பெருமை படுவார்.
நான் எடை குறைந்த பிறகு என்னால் பொது வாகனத்தில் சகஜமாக பயணிக்க முடிகிறது. மூச்சு விடுவதிலும் சிரமம் இல்லை. பசியையும் என்னால் கட்டுப்படுத்த முடிகிறது." என்றார். இவரது இந்த பெரிய மாற்றம் எடை குறைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!