Viral
“ஏழைகளுக்கு தேடிச் சென்று உதவி செய்யும் யூடியூபர்” : ஹர்ஷா சாய் வீடியோ பின்னணி என்ன? - முக்கிய தகவல் இதோ!
23 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே YOUTUBE -இல் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக அவரின் வீடியோகளுக்கு SUBSCRIBERS வரத்தொடங்கினர்.
அதன் பின்னர் 4 லட்ச ரூபாய் காரை முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதை தனது சேனலில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் பெரும் புகழ் பெற்ற அவருக்கு மீடியா வெளிச்சமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட அவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் சென்றது.
இதன் பின்னர் YOUTUBE மூலம் தான் சம்பாதிக்கும் காசினை மக்களுக்கு செலவிட நினைத்த அவர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் ஹிட் கொடுக்க அதன்பின்னர் பலருக்கு உதவ தொடங்கினார்.ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல் என்னும் அளவுக்கு பெட்ரோல் போட்டு கொடுப்பது என தற்போது ஒரு வள்ளல் என்ற அளவில் பேசப்படுகிறார்.
அதேபோல் 1 லட்சம் ஏழைகளுக்கு 5 நட்சத்தர ஹோட்டலில் உணவளித்து பெரும் புகழ்பெற்றார். இவரை நிகழ்கால கர்ணன் என்றே சிலர் கொண்டாடுகின்றனர். இது தவிர தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏழைகளுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் உணவு வசதி செய்து தருவதாக உறுதியளித்து ஆச்சரியப்படவைத்துள்ளார்.
இந்நிலையில் Harsha Sai - For You Tamil என்ற தமிழ் யூடியூப் சேனலுக்கு பின்னணி குரல் கலைஞர் கார்த்திக் என்பவர் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இவரிடம் யூடியூப் நிகழ்ச்சி போட்டி ஒன்று எடுத்தது. அந்த பேட்டியில் ஹர்ஷா சாய் நிறுவனத்தில் பணியாற்றுவது குறித்து விரிவாக விவரித்துள்ளார்.
மேலும் ஹர்ஷா சாய் எடுக்கும் வீடியோ அவர் செய்யும் உதவிகள் அனைத்து உண்மை எனத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது ஹர்ஷா சாயிடம் இதுவரை பேசியது இல்லை என பின்னணி குரல் கலைஞர் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!