Viral

நடக்க இருந்த திருமணத்தை திடீரென நிறுத்திய மணமகன்.. காரணம் கேட்டு ஷாக்கான மணமகள்!

இப்போது எல்லாம் திருமணங்கள் நிற்பதற்கான காரணங்களை கேட்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சமீபத்தில் திருமணத்திற்கு மணமகன் குடித்துவிட்டு வந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்தது. இப்படி திருமணத்தின்போது பல நிகழ்வுகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது.

தற்போது உத்தர பிரதேசத்தில் 12ம் வகுப்புத் தேர்வில் மணமகள் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பகன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சங்கர். இவரது மகன் சோனு. இவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மணமகள் 12ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இந்த காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

அதில்"கேட்ட வரதட்சணையைக் கொடுக்காத காரணத்தால்தான் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். திருமணத்திற்காக ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம் மணமகனுக்கு வழங்கப்பட்டுள்ளது" என பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மணமகன் வீட்டார் மறுத்துள்ளனர்.

இதையடுத்து இரு குடும்பத்தினருக்கும் அறிவுரை கூறி வழக்கைத் தீர்க்க போலிஸார் முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் இரு தரப்பினரும் ஒருமித்த முடிவுக்கு வராததால் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் போலிஸார் தவித்து வருகின்றனர்.

Also Read: திரையரங்கு முதல் OTT வரை.. நாளை வெளியாகும் 11 புதுப்படங்களின் பட்டியல் இதோ!