Viral
பஜனை நிகழ்ச்சியில் பண மழை.. குஜராத் பாடகருக்கு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி வீசிய ரசிகர்கள்.. VIDEO வைரல்!
குஜராத்தில் பிரபலமான நாட்டுப்புற பாடகர்கள்தான் கிர்திதன் காத்வி, ஊர்வசி ராதாதியா. இவர்கள் அந்த பகுதியில் பஜனை நிகழ்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை குஜராத் மாநிலம் வல்சாத் என்ற நகரில் நேற்று இவர்கள் பஜனை நிகழ்ச்சி நடத்தினர். இவர்கள் இசைக்கு என்று அந்த பகுதியில் தனி கூட்டமே உள்ளது.
எனவே அன்றும் இவர்கள் இசையை கேட்க கூட்டம் குவிந்தது. தொடர்ந்து இவர்கள் நிகழ்ச்சியை தொடங்கவே சிறிது நேரத்திலே அங்கிருந்தவர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். அதோடு இவர்களுக்கு தங்கள் பணங்களை அள்ளி வீசினர். ஒருத்தர் செய்வதை தொடர்ந்து அருகிலிருந்தவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பணங்களை அவர்கள் மேல் மழைபோல் பொழிந்தனர்.
இவ்வாறாக 10 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை பணத்தை மழையாக பொழிந்தனர். இதில் பாடகர்கள் இருவரும் தொடர்ந்து இசைத்துக்கொண்டே பாடலை பாடினர். தொடர்ந்து இவர்களுக்கு பணத்தை அள்ளி வீசினர். இவ்வாறாக அவர்களுக்கு லட்ச கணக்கில் பணம் கிடைத்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற பஜனைகளில் பொதுமக்கள் பணத்தை அள்ளி வீசுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு கடந்த ஆண்டு டிம்பரில் கூட நடந்துள்ளது. அதாவது குஜராத்தின் நவ்சாரி என்ற பகுதியில் கிர்திதன் காத்வியின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் பொழிந்த பண மழையில், சுமார் 50 லட்ச ரூபாய் இவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த மாதம் இவர்கள் இசை கச்சேரியில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த பனமழை தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இதே போல் மற்றொரு குஜராத்தி நாட்டுப்புற பாடகர்கள் தங்கள் பஜனை இசை கச்சேரி மூலம் சுமார் 2 கோடி ரூபாய் வசூல் செய்து, அதனை உக்ரைன் போர் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு இதேபோல் பெண் பாடகர் ஒருவர் மீது அனைவர் மத்தியிலும் நபர் ஒருவர் வாலி நிறைய பணத்தை எடுத்து வந்து அவர் மீது அபிஷேகம் செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் கண்டங்களை எழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!