Viral
லாரிக்கு அடியில் சிக்கிய குழந்தை.. 2 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவலம்.. பதைபதைக்கும் வீடியோ!
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா என்ற பகுதி உள்ளது. இங்கு சம்பவத்தன்று 67 வயதுடைய உதித் நாராயண் சான்சோரியா என்பவர் தனது 6 வயது பேரன் சாத்விக்குடன் ஸ்கூட்டியில் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஸ்கூட்டருக்கு பின்னே வந்த லாரி ஒன்று அவர்கள் வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் நிலைத் தடுமாறிய முதியவர் உதித் நாராயணன், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த சிறுவன், அந்த லாரிக்கு அடியில் சிக்கியிருந்துள்ளார். ஸ்கூட்டரில் இடித்து விட்டு நிற்காமல் சென்ற லாரி, அந்த சிறுவன் அடியில் சிக்கியிருந்ததையும் கண்டுகொள்ளவில்லை.
சுமார் 2 கி.மீட்டர் வரை அந்த சிறுவனை லாரி தரதரவென இழுத்து சென்றது. கான்பூர் - சாகர் நெடுஞ்சாலையான NH86-ல் நடந்த இந்த கோர சம்பவத்தில் சிறுவன் உடல் நசுங்கி பலியானார். லாரியில் சிறுவன் சிக்கியிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் லாரி ஓட்டூநர்களை எச்சரித்தனர். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாத ஓட்டுநர், லாரியை இயங்கிக்கொண்டே இருந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சாலையில் கற்களை போட்டு லாரியை நிறுத்தினர். பின்னர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓட்டுநரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் காருக்கு அடியில் சிக்கி சுமார் 35 கி.மீ வரை இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!