Viral
'இந்தாங்க காசு'.. தாஜ் ஹோட்டலை அதிரவைத்த இளைஞர்: இணைய வாசிகளிடம் வரவேற்பு பெற்று வரும் வீடியோ!
ஆடம்பர ஹோட்டல்களுக்கு சென்றாலே அதற்கு என்று ஒரு உடை, அலங்காரம் போன்ற விதிகள் சொல்லப்படாமலே பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் இப்படியான பெரிய ஹோட்டல்களில் இப்படிதான் சாப்பிடனும், நம் இஷ்டப்படி சாப்பிடக்கூடாது போன்ற நச்சரிப்புகளும் இருக்கும்.
இப்போது எல்லாம் சின்ன சின்ன கடைகளில் கூட 50 ரூபாய்க்கு சில்லறைக் காசு கொடுத்தாலே நம்மை மேலும் கீழுமாகப் பார்ப்பார்கள். இதனாலேயே பலரும் சில்லறைக் காசுகளை அதிகமாக வைத்துக் கொள்வது இல்லை.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சித்தேஷ் லோக்ரே என்ற இளைஞர் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது. மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு சித்தேஷ் லோக்ரே சாப்பிடச் சென்றுள்ளார். அங்குப் பிட்சா மற்றும் மாக்டெயில் ஆர்டர் செய்து விட்டுச் சாப்பிட்டு முடித்துள்ளார். பின்னர் அவரிடம் பில் கொடுக்கப்பட்டது.
பில்லை பார்த்துவிட்டு, தன்னிடம் இருந்த சில்லறைக் காசுகளை எடுத்து உணவு மேசை மீது வைத்துள்ளார். இதைப்பார்த்து தாஜ் ஹோட்டல் ஊழியர் அதிர்ச்சியடைந்தார். பிறகு அவர் கொடுத்த சில்லறைக் காசுகளை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த வீடியோவை சித்தேஷ் லோக்ரே தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டு, "பரிவர்த்தனைதான் முக்கியம், அது டாலராக இருந்தால் என்ன சில்லறையாக இருந்ததால் என்ன" என கேப்ஷன் இட்டு பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதேபோன்ற தன்னம்பிக்கை எங்களுக்கும் இருக்க வேண்டும், நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள் போன்று பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?