Viral
“படிப்புதான் முக்கியம்” உடல் முழுவதும் அலங்காரம்.. கழுத்தில் Stethoscope.. Exam எழுத வந்த மணப்பெண் Video
பெண்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே சில குடும்பங்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். மேலும் படிக்க வேண்டும் என்று அவர் கூறினாலும், திருமணம் ஆன பிறகு படித்துக்கொள் என்று கூறுவர். இதில் சிலரே தங்கள் மனைவி / மருமகள் படிக்கட்டும் என சம்மதம் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் அவரை அடுத்து படிக்க விடாமல் வீட்டிலியே இருக்க வைக்கின்றனர்.
இதையும் மீறி தற்போதுள்ள காலத்தில் சில பெண்களே முன்னேறி தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்ந்தெடுக்கின்றனர். அதே போன்ற ஒரு சம்பவம்தான் கேரளாவில் நிகழ்ந்துள்ளார். அங்கு பெண் ஒருவர் மணப்பெண் கோலத்தில் மருத்துவ செய்முறை தேர்வு எழுதியுள்ளார்.
அதாவது கேரளாவை சேர்ந்தவர் ஸ்ரீ லெக்ஷ்மி. இவர் அந்த பகுதியில் உள்ள பெத்தானி நவஜீவன் பிசியோதெரபி என்ற மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் இவர் திருமண நாள் அன்றே இவருக்கு செய்முறை தேர்வு தேதியும் இருந்துள்ளது.
இதனால் இவர் தனது திருமணத்தின் சடங்குகளின்போதே, சில மணி நேரங்களை ஒதுக்கி, தனது தேர்வை எழுத கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கே இவர் தேர்வையும் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டு வீடியோக்கள் வெளியான நிலையில், அதில் ஒரு வீடியோவில் மணமகள் ஸ்ரீ லக்ஷ்மி, மணக்கோலத்தில் காரில் ஏறி அமர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார். பின்னர் கல்லூரி வாசல் முன்பு நிறுத்தப்பட்ட காரின் கதவை, இவரது தோழி ஒருவர் திறந்து விடுகிறார். தொடர்ந்து அவர் இவரது திருமண புடவையின் மதிப்பையும் சரி செய்கிறார். பின்னர் அவர் தனது லேப் கோட்டை எடுத்து அணிந்துகொள்கிறார்; அவரது தோழி இவரது கழுத்தில் Stethoscope-ஐ மாட்டி விடுகிறார்.
பின்னர் மணப்பெண் வகுப்பறைக்குள் செல்கிறார்; அங்கே அவரது சக நண்பர்கள் இவரை வரவேற்கின்றனர். ஐவரும் அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசுகிறார். தொடர்ந்து அவரது இருக்கையில் தேர்வு எழுதுவதற்காக அமர்கிறார்.
சில மணி நேரங்கள் பிறகு தேர்வு முடிந்த பின், வெளியே வந்த மணப்பெண், அவரது தாயை கட்டி அணைத்துக் கொண்டு இருவரும் செல்கின்றனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து தம்பதியினருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
முன்னதாக இதே போன்று கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மணமகள் மணக்கோலத்தில் தேர்வுகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!