Viral
சாலையில் நடந்த திருமண ஊரவலத்தில் திடீரென புகுந்த கார்.. சோகத்தில் முடிந்த கொண்டாட்டம் ! | VIDEO
பொதுவாக இந்தியாவில் சிலர் திருமண நிகழ்ச்சியின்போது, சாலையில் ஊரவலமாக செல்வர். அதிலும் வட மாநிலங்களில், திருமண நிகழ்வு என்பதை ஒரு திருவிழாபோல் ஒரு வாரகாலமாக கொண்டாடுவர். அதுமட்டுமின்றி, அங்கு இரவு நேரங்களில்தான் நடைபெறும். அப்போது திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மணப்பெண், மாப்பிள்ளை என அனைவரும் ஊர்வலமாக செல்வர்.
டோலக் வாசித்து நடமாடிக் கொண்டே திருமண மண்டபத்திற்கு செல்வர். இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக அவர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்வர். இந்த நிகழ்வில் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் என அனைவரும் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக இருப்பர். அப்படி ஒரு நிகழ்வு தற்போது சோகத்தில் முடிந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தின் பஹாத்ராபாத் என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு திருமண கொண்டாட்ட ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் மேள தாள வாத்தியங்கள் முழங்க சாலைகளில் நடனமாடிக் கொண்டு ஊர்வலமாக வந்தார்கள்.
அந்த சமயத்தில் திடீரென ஒரு ஸ்கார்பியோ கார் ஒன்று ஊர்வலத்திற்குள் புகுந்தது. இதில் அங்கே ஆடி பாடி கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த மீட்பு குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து ஏற்படுத்தி சென்ற கார் ஓட்டுநர் தற்போது கைது செய்யப்ட்டுள்ளார்.
அப்போது அவர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. பின்னர் அவர் ஓட்டி வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்து தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் திருமண ஊரவலத்தின்போது திடீரென அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளது உத்தரகாண்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!