Viral
“I LOVE YOU THREEங்க..” ஒட்டி பிறந்து 3 சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. கென்யாவில் வினோதம் !
திருமணம் செய்துகொண்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணை வைத்தும், ஒரு பெண் ஒரு ஆணை வைத்தும் சமாளிக்க முடியாது என்று திருமணமானவர்கள் நொந்துகொள்வது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இங்கு ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பேர், அதுவும் சகோதரிகளை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கென்யா நாட்டை சேர்ந்தவர்கள் கேத், ஈவ் மற்றும் மேரி. இவர்கள் மூன்று பெரும் ஒன்றாக பிறந்த சகோதரிகள் ஆவர். இவர்கள் அந்த பகுதியில் காஸ்பல் இசையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் மூன்று பெரும் ஒரே நபரை திருமணம் செய்துகொண்டு ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஸ்டீவோ என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் அந்த பகுதியில் வளர்ந்துவரும் தொழிலதிபராக இருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்டீவோவை கேத் சந்தித்துள்ளார். பின்னர் அவர் தனது 3 சகோதரிகளுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே மூன்று போரையும் திருமணம் செய்து கொள்கிறீரா என்று சேர்ந்து ப்ரொபோஸ் செய்துள்ளனர்.
முதலில் யோசித்த அவர், அதன்பிறகு மூன்று பேருடனும் சில நாட்கள் டேட்டிங் செய்துள்ளார். அப்போது இவர்கள் மூன்று பேருக்குள்ளும் எந்த ஒரு பொறாமை, சண்டை ஏற்படவில்லை. இதனால் மூன்று பேரையும் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி மூன்று பேரையும் அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தனது திருமணம் குறித்து ஸ்டீவோ கூறுகையில், "நான் ஒருவருக்காக மட்டும் படைக்கப்படவில்லை; மூன்று பேருக்காக படைக்கப்பட்டிருக்கேன். பிறப்பிலேயே நான் ஒரு polygamous. அதனால் எனக்கு இவர்களை திருமணம் செய்துகொள்வதில் ஆர்வமும் இருந்தது. மூன்று பேருடனும் நான் சமமான நேரங்களை செலவிடுகிறேன்.
அவர்களுடன் நான் செலவழிக்கும் நேரமானது ஒரு அட்டவணையை உருவாக்கி அதன்மூலம் பின்பற்றுகிறேன். இது பெரிய கடினமான வேலை ஒன்றும் இல்லை. அவர்கள் மூன்று பேருக்குள்ளும் இதுவரை சண்டை எதுவும் வந்ததும் இல்லை" என்றார்.
மேலும் இது குறித்து சகோதரிகள் கூறுகையில், "நாங்கள் மூன்று பேரும் ஸ்டீவோ மீது ஆசைப்பட்டோம். எனவே அவரை திருமணம் செய்துகொண்டோம். எங்கள் நிலை என்னவென்றால், ஸ்டீவோ எங்களை சமமாகவும், சரியாகவும் நேசிக்க வேண்டும். அதற்காக நாங்களும் சில முயற்சிகளை செய்கிறோம்.
ஸ்டீவோவுக்கு நாங்கள் மூன்று பேரே போதுமானது; எங்கள் வாழ்க்கையில் வேறொரு பெண்ணை வரவிட மாட்டோம். நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்றனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பே நடைபெற்றது. இது தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி பேசு பொருளாக அமைந்துள்ளது.
பொதுவாக கென்யா போன்ற சில நாடுகளில் இதுபோல் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளலாம். இதுபோன்ற நிகழ்வு ஏற்கனவே கென்யா நாட்டில் நடந்துள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!