Viral
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வைர நெக்லஸ்.. இரவோடு இரவாக திருடி சென்ற எலி.. IPS அதிகாரி வெளியிட்ட VIDEO !
பொதுவாக நாட்டில் பல்வேறு திருட்டு சம்பவம் நடைபெறுவது வழக்கம். இதுபோன்று திருட்டு சம்பவங்களுக்கு எல்லாம், பல கட்டங்களாக திட்டம் தீட்டி முறையாக செய்லபடுத்தவர். அதில் பலரும் சிக்கியிருந்தாலும், சிலர் பிடிபடாமல் இன்னும் வெளியில் நடமாடி வருகின்றனர்.
தூம், மணி ஹெய்ஸ்ட் போன்று பேங்க் கொள்ளை, நகை கொள்ளை, அரிதான பொருட்கள் கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு பக்காவாக திட்டம் தீட்டி பலரும் செய்லபடுத்தி வருகின்றனர். இவ்வளவு ஏன், ஓடும் இரயில் பெட்டியில் துளையிட்டு கோடி கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் நாட்டையே உலுக்கியது.
ஒரு சிறிய திருட்டு என்றாலும், சிக்காமல் பலரும் திருடி ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்கின்றனர். இப்படி ஒவ்வொரு திருட்டையும் திருடர்கள் பிளான் போட்டு செய்லபடுத்தி வரும் நிலையில், இங்கு ஒரு எலி நைசாக வந்து நேக்காக ஒரு வைர நெக்லஸை திருடி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ராஜேஷ் ஹிங்கான்கர் என்பவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது ம.பி-யிலுள்ள இந்தூரில் நகர குற்றப்பிரிவு கூடுதல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தினதோறும் எதாவது ஒரு பதிவையாவது செய்து விடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த மாதம் 28-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நகைக்கடை ஒன்றில் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் நகையை எலி ஒன்று திருடி செல்வது இடம்பெற்றிருந்தது.
சுமார் 30 நொடி இருக்கும் அந்த வீடியோவில், எலி ஒன்று நைசாக காட்சிப்படுத்த வைத்திருக்கும் நகை பெட்டிக்குள் வருகிறது. பின்னர் அதையே சிறிது நேரம் அங்கு இருக்கும் வைர நெக்லஸையே உற்று நோக்குகிறது. பிறகு தனது வாயால் அந்த நெக்லஸை கடித்து கொண்டு அங்கிருந்து மேலே ஜம்ப் செய்து தப்பி செல்கிறது.
இதனை பகிர்ந்த அந்த ஐபிஎஸ் அதிகாரி, கூடவே பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ‛‛இந்த எலி யாருக்காக வைர நெக்லைஸ எடுத்திருக்கும்'' என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இது தற்போது இனத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் இதனை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
முதல் முறையாக லெய் ஒன்று நகையை திருடியுள்ளது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து, இந்த சம்பவம் எங்கு நடந்து என்பது குறித்து இணையத்தில் தேடு பொருளாக மாறியுள்ளது.
அதோடு இந்த சம்பவம் கேரளாவில் உள்ள நகைகடை ஒன்றில் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் சோதனை செய்தபோது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது தற்போது இணையத்தில் வலம் வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!